பிரியாணியை ரசிக்காதவர்களும் ருசிக்காதவர்களும் இல்லை. அம்மி, உரல் காலத்து பாட்டி, தாத்தா முதல் இன்றைய மிக்ஸி, ஓவன், இண்டெர்நெட் தலைமுறை வரை அனைவருமே பிரியாணியின் பரம விசிறிகள்தாம். இத்தனைக்கும் நாம் ஒரு சில பிரியாணி வகைகளை மட்டுமே சுவைத்திருப்போம். அதன் அத்தனை வடிவங்களும்/வகைகளும் தெரிந்தால் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஒரு குட்டி மயக்கமே வந்துவிடும்.