இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான்? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம்.