ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர். இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் ஹிட்லர்தான். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். குரூரத்தின் உச்சகட்டத்தை அநாயாசமாகக் கடந்து சென்றவர் ஹிட்லர். கரப்பான் பூச்சிகளை அடித்துக் கொல்வதைப் போல் மக்களைக் கொன்று குவித்தார். இவரது உத்தரவின்படி, நாஜிப்படைகள் மொத்தம் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர். வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத பெரும்சோகம் அது. பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார் பா.ராகவன்.